உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

புதுச்சேரி: கொரவள்ளிமேடு, சுப்ரமணிய படையாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.பள்ளி துணை முதல்வர் தில்லைகண்ணு காமராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பத்மபிரியா முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் காந்தி வரவேற்றார். விழாவில், பொன்வண்டு சோப்பு கம்பெனியின் ஹெச்.ஆர்., பிரிவு மேலாளர் ராஜா, கணக்காளர் செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினர்.ஆசிரியர் தங்கராசு தொகுத்து வழங்கினார். விரிவுரையாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்