ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ஆசிரியர் தின விழா
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் பங்கேற்றார். கடந்த கல்வியாண்டில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது, கேடயம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினர். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை செயல் அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.