வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்க விழா
சிதம்பரம்: சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில் வேளாண் கல்லுாரில் 2026 - 2027ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வேளாண் புல முதல்வர் ஹரிபிரியா தலைமை தாங்கினார். மாணவர் சேர்க்கை இயக்குநர் பாலபாஸ்கர் முன்னிலை வகித்தார். மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வரவேற்றார். மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் நன்றியுரை கூறினார்.