உள்ளூர் செய்திகள்

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

வால்பாறை: அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நாட்டுநலப்பணி திட்ட நிறைவு விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்டம் சார்பில், காலாண்டு விடுமுறையின் போது, ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், பள்ளி வளாகம் சுத்தம் செய்தல், இலவச சட்ட உதவி முகாம், பட்டிமன்றம், தியானம், கலை நிகழ்ச்சி, சுற்றுப்புற சுகாதாரம், மருத்துவ முகாம், சுகாதாரம் குறித்த சிறப்பு கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.இந்நிலையில், நாட்டுநலப்பணி திட்ட நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். முகாமிற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சுப்ரமணியம், உதவி திட்ட அலுவலர் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்