உள்ளூர் செய்திகள்

தினமலர் பட்டம் இதழ் வினாடி வினா போட்டி

விழுப்புரம்: 'தினமலர் பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி, விழுப்புரம் அருகே மரகதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.இந்த வினாடி வினா போட்டியில், அப்பள்ளியின், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்து அவர்கள், 8 குழுக்களாக பிரித்து 3 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகாம்பிகை தலைமை தாங்கினார்.இப்போட்டியின் நிறைவாக, 9ம் வகுப்பு மாணவி கவிநயா, 8ம் வகுப்பு மாணவி கலையரசி ஆகியோர் முதலிடத்தையும், 8ம் வகுப்பு மாணவிகள் கீர்த்திகா, காவியா ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இவர்கள், இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மரகதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி ரமேஷ் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்