உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவி மாநில போட்டிக்கு தகுதி

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், சிங்கிலியன் கோம்பை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்று வருகின்றனர்.இப்பள்ளி மாணவர்கள் வட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். வட்ட அளவிலான சதுரங்கம், சிலம்பம், கபடி, வளையப்பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.அதேபோல், மாநில அளவிலான, 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் இப்பள்ளியின், 9ம் வகுப்பு மாணவி விஹாசினி கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்