உள்ளூர் செய்திகள்

கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரிப்பு: மத்திய அரசு

புதுடில்லி: நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை - செப்டம்பர் 2026 காலாண்டில் 5.1 சதவீதமாக ஆக குறைந்தது.மத்திய அரசின் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கையின் படி, கடந்த ஆண்டு (2025) ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.2 சதவீதமாக இருந்தது. அது 2026, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 5.1 சதவீதமாக குறைந்தது. மேலும் ஏப்ரல் - ஜூன் காலண்டில் 5.4 சதவீதத்தை விடக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு, கிராமப்புற வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்ட முன்னேற்றமே காரணம். ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.4 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாகவும், கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.8 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாக குறைந்தும், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 6.7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக சற்றே உயர்ந்துள்ளது.வேலை தேடுவோர் 54.6 சதவீதத்திலிருந்து 55.5 சதவீதமும், வேலையில் இருப்போர் 51.7 சதவீதத்திலிருந்து 52.7 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.இதற்கு விவசாயத் துறை வேலைவாய்ப்பு, கிராமப்புற சுயதொழில் அதிகரித்தது முக்கியக் காரணமாகும். தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு தொடர்ந்து முன்னேற்றத்தில் உள்ளது.கிராமப்புறங்களில் முன்னேற்றம் இருந்தபோதிலும், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை சற்று கூடியுள்ளது. எனினும், நகர்ப்புறங்களில் நிரந்தர சம்பளம் பெறுவது ஓரளவுக்கு உயர்ந்துள்ளன.ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் சுமார் 57.9 கோடி மக்கள் (40.5 கோடி ஆண்கள் மற்றும் 17.4 கோடி பெண்கள்) வேலைவாய்ப்பு பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்