பெண்கள் அதிகாரமளிக்கும் மைய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் அதிகாரமளிக்கும் மையத்தில், பாலின நிபுணர் மற்றும் நிதி கல்வியறிவு வல்லுநர் என இரண்டு காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் இம்மையத்தில், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பப் படிவம் மற்றும் பணியிடங்களுக்கான தகுதி விபரங்களை காஞ்சிபுரம் மாவட்ட இணையதளமான https://kancheepuram.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டடம், முதல் தளம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் என்ற முகவரியில், வரும் 25ம் தேதி மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.