உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் சிங்கப்பெண் அதிரடி படையினர் விழிப்புணர்வு

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடி படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் இளையராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடி படை சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி, குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், போக்சோ சட்டம், அதிகரித்து வரும் சைபர் இணையவழி குற்றங்கள் குறித்தும், இவைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்தும், ஆபத்து காலங்களில் பெண்கள் தொடர்பு கொள்ள வேண்டிய 1091 எண் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.தொடர்ந்து, போக்சோ, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் தனசேகரன், லோகநாராயணன், அசோகன், பரிமளா, ராஜேந்திரன், முத்துமீனா, அரவிந்தன், பார்த்திபன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கஸ்துாரி பங்கேற்றனர். ஆசிரியை சசிகலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்