உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் சட்ட வகுப்பு ஆசிரியராக சார்பு நீதிபதி

மதுரை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சட்டம் தொடர்பான வகுப்பு எடுக்க, மாவட்ட தலைமை நீதிபதிகளுக்கு நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் ஆசிரியராக சார்பு நீதிபதி இருப்பார். அனைவருக்கும் கல்வித்திட்டம், கட்டாயக்கல்வி, கல்விக்காக மத்திய, மாநில அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள், கல்வி நிதியுதவி, உயர் கல்விக்கான வங்கிக்கடன் போன்ற சலுகைகள் குறித்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்தால் புவி வெப்பமயமாகி வருவதை தடுப்பது உட்பட சட்டம் தொடர்பான வகுப்பு எடுக்க, மாவட்ட தலைமை நீதிபதிகளுக்கு நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு சட்டம் தொடர்பான வகுப்பு எடுக்கும் பொறுப்பு, அந்தந்த மாவட்ட தலைமை நீதிபதியை தலைவராக கொண்டு செயல்படும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் சார்பு நீதிபதி, ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு சட்ட வகுப்புகளை நடத்துவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்