உள்ளூர் செய்திகள்

உலக தரத்திலான மருந்து ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஒப்புதல்

உலக தரத்திலான மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு ரூ.322.51 கோடியை ஒதுக்கியுள்ளது. உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில், சர்வதேச தரத்திலான மருந்து ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்(சி.எஸ்.ஐ.ஆர்) மத்திய அரசிடம் ரூ.322.51 கோடி நிதி கேட்டிருந்தது. அந்த திருத்தியமைக்கப்பட்ட தொகைக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. உலகளாவிய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதானது, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டு துறையில் புதிய உத்வேகத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வருவதோடு, சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் நன்மையை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்