உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளிகள் மாநாட்டின் அதிரடி கோரிக்கை ஏற்கப்படுமா?

மாணவர்களை 8ம் வகுப்புவரை பெயிலாக்கக்கூடாது என்ற விதிமுறையை திரும்ப பெறும்படி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் பல்வேறு அசோசியேஷன்களால் "தமிழ்நாடு வளர்ச்சிக்கான தரமான கல்வி" என்ற தலைப்பில் சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டில், அரசுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதிலுமிருந்தும் ஏராளமான பள்ளிகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பல அம்சங்களை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒன்றுதான், 8ம் வகுப்புவரை மாணவர்களை பெயிலாக்கக்கூடாது என்பது. இதைத்தவிர, பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசுக்கு வேண்டுகோள், என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை பின்பற்றுவதன் மூலமாக சமச்சீர் கல்வியில் தரத்தை பேணுவதற்கான வேண்டுகோள், மூன்றுமொழி கல்விமுறையை புகுத்துவது மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்தை மீளாய்வு செய்வது உள்ளிட்டவை அந்த அம்சங்களில் அடங்கும். இந்த மாநாட்டில் பல முக்கிய தனியார் கல்வித்துறை பிரமுகர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்