எஸ்.ஆர்.எம். பல்கலை நுழைவு தேர்வு இன்று துவக்கம்
சென்னையில், எஸ்.ஆர்.எம்., பல்கலை இயக்குனர் (மாணவர்சேர்க்கை) முத்து சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது : நாடு முழுவதும் 115 நகரங்களில் உள்ள 190 மையங்களில், மாணவர்களுக்கான அகில இந்திய நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான, அகில இந்திய நுழைவு தேர்வில், நாடு முழுவதும் 1 லட்சத்து 36 ஆயிரத்து 126 பேர் பங்கேற்கின்றனர். பி.டெக்., - எம்.டெக்., - எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடக்கிறது. பி.ஆர்க் படிப்புக்கு, தேசிய கட்டடக் கலை பொது நுழைவு தேர்வு மதிப்பெண்ணுடன் (நாட்டா) விண்ணப்பிக்க வேண்டும். நுழைவு தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 12 முதல் 18ம் தேதி வரை, எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் மட்டுமே நடைபெறும். கலந்தாய்வு முடிவுகள், பல்கலை இணையதளத்திலும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக தபால் மூலமும் தெரிவிக்கப்படும். கலந்தாய்வு நடக்கும் நாளன்று, கல்வி கடன் பெறுவதற்கு, தேசிய வங்கிகளுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மருத்துவ முதுநிலை சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, ஏப்., 24ம் தேதி 10 முதல் 1 மணி வரை பல்கலை வளாகத்தில் நடைபெறும். இவ்வாறு முத்து சுப்பிரமணியன் கூறினார். எஸ்.ஆர்.எம்., பல்கலையின் முதன்மை கல்வி அலுவலர் பொன்னவைக்கோ உடனிருந்தார்.