உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி சென்னை வழங்கும் 10 புதிய ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள்

சென்னை: சென்னை ஐஐடி-ல் பள்ளி இணைப்புத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் படிப்புகளின் எண்ணிக்கை விரிவுபடுத்தி உள்ளது.ஏற்கனவே கற்பிக்கப்படும் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, மின்னணு அமைப்புகள் ஆகிய பாடங்களுடன், தற்போது 10 புதிய ஆன்லைன் நடைமுறை சான்றிதழ் படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை, நாடு முழுவதும் உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்காக உருவாக்கப்பட்டவை. ஒவ்வொன்றும் 8 வாரங்கள் நீளமானவை.2025 ஆகஸ்ட் பிரிவுக்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைமுறையில் உள்ளது. ஜூலை 25ம் தேதிக்குள் இப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டும். code.iitm.ac.in/schoolconnect என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.ஐஐடி சென்னை இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி கூறுகையில், இந்த படிப்புகள் வளர்ந்து வரும் துறைகளைப் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே தூண்டுகின்றன. இதன் மூலம் எதிர்கால கண்டுபிடிப்பாளர்கள் உருவாக உதவுகிறது, என்றார்.இந்தத் திட்டம், ஐஐடி சென்னையில் உள்ள மக்கள் தொடர்பகம் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் முக்கிய முயற்சியாகும். பள்ளி கல்விக்கும் உயர்கல்விக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்