அரையாண்டு தேர்வு நிறைவு; இன்று முதல் 12 நாள் பள்ளி விடுமுறை
திருப்பூர்: நேற்றுடன் (23ம் தேதி) அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வுகள் முடிந்தது. இன்று (24ம் தேதி) முதல் ஜன. 4ம் தேதி வரை, 12 நாட்கள் விடுமுறை. விடுமுறை முடிந்து, ஜன.5 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.ஜன. 5ல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், மாணவ, மாணவியருக்கு, சென்னையில் இருந்து மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. முதல் வகுப்புக்கு, 8,690, இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு முறையே, 9,688 மற்றும், 9,643. 4 - 11 ஆயிரத்து, 261, 5 - 12 ஆயிரத்து, 324, 6 - 5,202, 7 - 5,445 என மொத்தம், 62 ஆயிரத்து, 253 புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.திருப்பூர் தெற்கு வட்டார பள்ளிகளுக்கான புத்தகங்கள், குப்பாண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளியிலும், வடக்கு வட்டாரத்துக்கான புத்தகங்கள், 15 வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளியிலும் வைக்கப்பட்டு, பள்ளிகள் வாரியாக பிரிக்கப்பட்டு வருகிறது.இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பள்ளி திறக்கும் நாளில், மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் மூலம் வழங்கப்படும்.