உள்ளூர் செய்திகள்

ரயில்வே தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரம்: 13 மாணவர்கள் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ரயில்வே இன்ஜினியர் தேர்வில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 13 மாணவர்கள், சி.பி.ஐ. அதிகாரி களால் கைது செய்யப்பட்டனர். தேர்வுக்கு முன்னதாக அவர்களுக்கு கேள்வித்தாளை வழங்கிய ரயில்வே அதிகாரிகள் ஐந்து பேர் தலைமறைவாகி விட்டனர்; அவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தேடிவருகின்றனர். ரயில் இன்ஜின் அசிஸ்டென்ட், லோகோமோடிவ் இன்ஜினியர் தேர்வின் கேள்வித்தாள்களுக்கு அதிகபட்சம், ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பரிமாறப்பட்ட பணம் மற்றும் கேள்வித்தாள்கள் பறிமுதல் செய்யப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்