உள்ளூர் செய்திகள்

மிட்டாய் என நினைத்து மாத்திரைகள் சாப்பிட்ட 13 மாணவர்கள் மயக்கம்

முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் ஒன்றியம் மணலுார் ஊராட்சி ஆரபத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மிட்டாய் என நினைத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவர்கள் 13 பேர் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஆரபத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் மகள் இபாஞ்சலி 8, மூன்றாம் வகுப்பு படிக்கிறார். இவரது உறவினர் வீட்டில் போதை பழக்கத்தை மறக்க பயன்படுத்தும் நிக்கோட்டின் பசை மாத்திரைகள் கிடந்துள்ளன. இபாஞ்சலி அவற்றை மிட்டாய் என நினைத்து பள்ளிக்கு எடுத்துச் சென்றார். அங்கு சக மாணவர்களுக்கும் கொடுத்து அவரும் சாப்பிட்டுள்ளார்.சில நிமிடங்களில் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. ஆசிரியர்கள் விசாரித்த போது மாத்திரைகள் சாப்பிட்டது தெரிந்தது. இதையடுத்து மாத்திரை சாப்பிட்ட 13 மாணவர்கள் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரெஜினா, நிஷாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர். மாணவர்களுக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது என பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்