உள்ளூர் செய்திகள்

சென்னை சட்டக் கல்லூரி வகுப்பு ஜனவரி 19 முதல் ஆரம்பம்

இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் வெளியிட்ட அறிக்கை: ஜனவரி 19 முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. மூன்று ஆண்டு சட்டப் படிப்பிற்கான முதலாண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் மற்றும் ஐந்து ஆண்டு சட்டப் பட்டப் படிப்பிற்கான முதலாண்டு வகுப்புகள் காலை 9 மணியிலிருந்து முற்பகலில் நடைபெறும். ஐந்து ஆண்டு சட்டப் படிப்பிற்கான இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரையிலான வகுப்புகள், பிற்பகல் 2 மணிக்குத் துவங்கும். அடையாள அட்டை  வைத்திருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மட்டுமே சட்டக் கல்லூரி வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவர்.   மேலும் கல்லூரி வளாகத்தினுள் மாணவர்கள் அரசியல், ஜாதி மற்றும் மதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் அது தொடர்பாக சுவரொட்டிகள் ஒட்டுவதும், துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கல்லூரியினுள் மாணவர்கள் அனைவரும் பிரிவினையின்றி ஒற்றுமையுடன் பழகி, கல்லூரி அமைதியாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும். கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி அன்னிய நபர்கள் யாரும் கல்லூரி வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார். பாதுகாப்பு கருதி கல்லூரி வளாகத்தினுள் உள்ளும், வெளியிலும் போதுமான காவல்துறை பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்