பெருந்துறை காருண்யா வித்யா பவன் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
பெருந்துறை: பெருந்துறை, சிலேட்டர்புரம், காருண்யா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளி மாணவி திவ்யநிலா, 595 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். வணிகவியல், கணக்கு பதிவியல் மற்றும் வணிக கணிதம் ஆகிய பாடங்களில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்தார். மோனிஷா, 575 மதிப்பெண்களுடன், கணினி பயன்பாடு பாடத்தில், 100க்கு 100 மதிபெண் பெற்று இரண்டாமிடம், நிவிதா, 564 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றார்.கணினி அறிவியலில் மூன்று பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் இருவரும், வணிக கணிதம், கணக்குபதிவியல், வணிகவியலில் தலா ஒருவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர், கற்பித்த ஆசிரியர்களை, பள்ளி தாளாளர் பொன்னுசுவாமி மற்றும் நிர்வாகிகள் பாராட்டி பரிசு வழங்கினர்.பள்ளியில் ஆறாம் வகுப்பில் இருந்து நீட், ஜெ.இ., பயிற்சி வகுப்பு மற்றும் சி.ஏ., பவுண்டேசன் வகுப்பு நடத்தப்படுகிறது. பிளஸ் ௧ சேர்க்கையில், 480 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு, 100 சதவீதம், 475 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு, 75 சதவீதம், 470 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு, 50 சதவீதம், 465 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு, 25 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்று பள்ளி தாளாளர் பொன்னுசுவாமி தெரிவித்தார்.