உள்ளூர் செய்திகள்

பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது : 20 மாணவர்கள் உயிர் தப்பினர்

இந்த விபத்தில், வேனில் இருந்த 20 மாணவ, மாணவியர் உயிர் தப்பினர். ஆத்தூர் கிரைன்பஜாரில் பாரதி வித்யாலயா நர்ஸரி, பிரைமரி பள்ளி செயல்படுகிறது. அந்த பள்ளிக்கு சொந்தமான மகேந்திரா வேன்,  மாலை 6.30 மணிக்கு மாணவர்களை வீட்டில் விடுவதற்காக புறப்பட்டு சென்றது. ஆத்தூர் தெற்கு காடு, அம்மம்பாளையம், காந்திபுரம், துலுக்கனூர் பகுதி மாணவர்கள், வேனில் இருந்தனர். இரவு 7 மணியளவில் தெற்குகாடு மாணவர்களை இறக்கி விட்ட டிரைவர், ஆத்தூர் - திருச்சி சாலையின் குறுக்கே கோரையாற்றின் கரையில் வேனை செலுத்தினார்.அப்போது, திடீரென கட்டுப்பாடு இழந்த வேன், ஆற்றங்கரையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி விட்டது. சாய்ந்தபடி பள்ளத்தில் நின்ற வேன், 15 அடி ஆழம் கொண்ட ஆற்றில் எந்த வினாடியும் கவிழும் நிலையில் இருந்தது. வேனில் இருந்த காந்திபுரம், அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 மாணவர்கள், பயத்தில் அலறித் துடித்தனர்.அதை பொருட்படுத்தாத டிரைவர், கிளீனர் ஆகியோர், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். கூச்சல் சத்தம் கேட்ட அப்பகுதியினர் விரைந்து வந்து, மாணவர்களை காப்பாற்றினர். விபத்து குறித்து தகவலறிந்த ஹைவே பேட்ரல் மற்றும் ஆத்தூர் போலீஸார், மாணவர்களை மீட்க உதவினர். இந்த சம்பவங்களை தொடர்ந்து, பள்ளி வாகனங்கள், டிரைவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும்படி, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஆத்தூரில் பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்