உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026

தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் பணியாற்றும் இடநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் தகுதிகளை புதுப்பித்து கொள்ளவும், பதவி உயர்வு மற்றும் நிரந்தர நியமனம் தொடர்பான தகுதிகளை உறுதி செய்யவும் இந்தத் தேர்வு அவசியம்.தேர்வு விபரம் தாள் 1: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்பாடத்திட்டம்: குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் முறைகள், தமிழ், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல்தாள் 2: நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்பாடத்திட்டம்: குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல்தேர்வு முறை: கொள்குறி வகை அடிப்படையில் ஒவ்வொரு தாளிலும் தலா 150 கேள்விகள் கேட்கப்படும்.தேர்வு நேரம்: 3 மணிநேரம்விண்ணப்பிக்கும் முறை: https://trb1.ucanapply.com/apply_now எனும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 10, 2026தேர்வு நடைபெறும் நாட்கள் (தோராயமாக):தாள் 1 - ஜூலை 4தாள் 2 - ஜூலை 5விபரங்களுக்கு: https://trb.tn.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்