உதவி மருத்துவர் பணிக்கான தேர்வில் 205 பேர் ஆப்சென்ட்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே அத்திமுகம் அதி-யமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், உதவி மருத்துவர் (பொது) பணிக்கான தேர்வு நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு, தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உடனிருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி, கொன்சாகா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஸ்ரீவிநாயகா பாலிடெக்னிக் கல்லுாரி, பி.எம்.சி., டெக் கல்லுாரி, பி.எஸ்.வி., இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளிலும், உதவி மருத்துவர் பணிக்கான தேர்வு நடந்தது. மொத்தம், 841 பேர் தேர்-விற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 636 மருத்துவர்கள் தேர்வு எழுதினர். 205 பேர் தேர்வெழுத வரவில்லை.