உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 25ம் ஆண்டு விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 25வது ஆண்டு விழா, விவேகானந்தா வித்யாலயா கல்வி குழுமத்தின் தலைவர் லோகராஜ்துரைபாபு தலைமையில், நடந்தது. பள்ளி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மங்கையர்கரசி லோகராஜ், இணை தாளாளர் ஹரீனாசஷி லோகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதன்மை முதல்வர் திலகவதி வரவேற்றார்.விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி, விவேகானந்தா வித்யாலயா கல்வி குழுமத்தின் இணை செயலர் ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்று, கடந்த ஆண்டு பொதுத்தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், நுாறுக்கு நுாறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசுகளை வழங்கினர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி பேசியதாவது:ஆலமரத்தின் விதை, சிறியதாக இருந்தாலும், அது வளர்ந்து பெரிதாகி பல பேருக்கு நிழல் கொடுக்கும். தான் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தாலும், எனுக்கு அடையாளம் தந்தது கல்வி மட்டுமே.தனது ஒளிப்பதிவை, இந்த விழாவில் காணும் பொழுது மாணவர்கள் மனதிலும், தாங்களும் சந்திராயன் 6,7 என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று, அவர்கள் மனதில் விதை விதைக்கும்.நிலவில் சந்திரன் மின்கலம், நீர் கனிமங்கள் இருப்பதை ஆய்வு செய்ய இருப்பதை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. நிலவின் தென்துவருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா. இதனால், உலகமே விழித்துக்கொண்டு நிலவை நோக்கி பயணிக்க செல்கின்றனர். இந்தியாவில் வாய்ப்புகள் உருவாகி கொண்டு இருக்கிறது. இதை நம் குழந்தைகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு மயில்சாமி பேசினார்.விழாவில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் முதல்வர் கீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்