உள்ளூர் செய்திகள்

சர்வதேச ஓபன் செஸ் போட்டி செங்கையில் 25ல் துவக்கம்

சென்னை: செங்கல்பட்டில் நடக்க உள்ள சர்வதேச, பிடே ரேட்டிங் ஓபன் செஸ்' போட்டியில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.ஸ்ரீ ராகவேந்திரா செஸ் அகாடமி மற்றும் மாஸ்டர் மைன்ட் செஸ் அகாடமி சார்பில், முதலாவது வித்யாசாகர் சர்வதேச பிடே ரேட்டிங் ஓபன் செஸ் போட்டி, இம்மாதம் 25ல் துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது.போட்டிகள், செங்கல்பட்டில் உள்ள வித்யாசாகர் இன்ஸ்டிடியூட்டில் நடக்கின்றன. போட்டிகள் பிடே விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் நடக்கின்றன. நான்கு நாட்களும், தினமும் இரண்டு சுற்றுகள் வீதம், மொத்தம் எட்டு சுற்றுகள் நடக்க உள்ளன.போட்டியின் மொத்த பரிசு தொகையாக, 5 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. தவிர ஒன்பது, 11, 13, 18 ஆகிய வயதிற்கு உட்பட்டோருக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படுகின்றன. பங்கேற்க விரும்புவோர், வரும் 22ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.விபரங்களுக்கு, 86102 92372, 90803 69232 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்