ஒழுங்கீன நடவடிக்கை: புதுக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் டிஸ்மிஸ்
சென்னை: "தினமலர்" நாளிதழில் வெளியான புகைப்படத்தை தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்ட புதுக் கல்லூரி மாணவர்கள் மூவரை கல்லூரி நிர்வாகம் "சஸ்பெண்ட்" செய்தது. சென்னை, ராயப்பேட்டை புது கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆகஸ்ட் 22ம் தேதி பேருந்தின் மேற்கூரையில் ஏறி நடனமாடியபடி பயணம் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, "தினமலர்" நாளிதழில், புகைப்படம் வெளியானது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி, கல்லூரி நிர்வாகத்திற்கு போக்குவரத்து துறை கடிதம் அனுப்பியது. மேலும், உயர்கல்வி துறையும் நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தியது. இதையடுத்து, ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட, மூன்று மாணவர்களை கல்லூரி நிர்வாகம் "சஸ்பெண்ட்" செய்துள்ளது.