உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் நல அலுவலர் பணி தேர்வில் 356 பேர் ஆப்சென்ட்

கோவை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நேற்று நடந்த, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் பதவிக்கான தேர்வில், 1,858 பேர் தேர்வு எழுதினர்; 356 பேர், ஆப்சென்ட் ஆகியிருந்தனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு, எட்டு மையங்களில் நடந்தது. இத்தேர்வில் கோவை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்திருந்த, 2,214 நபரில், 1,858 மட்டுமே தேர்வு எழுதினர். 356 பேர் பங்கேற்கவில்லை. தேர்வை, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் பன்னீர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்