விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை; மே 9ல் மாவட்ட அளவிலான தேர்வு
நாமக்கல்: விளையாட்டு விடுதியில் மாணவர் சேர்க்கைக்கு மாவட்ட அளவிலான தேர்வு, வரும், 9ம் தேதி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது என, விளையாட்டு அலுவலர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, நல்ல பயிற்சி, தங்குமிட வசதியுடன், 23 விளையாட்டு விடுதிகள், 5 விளையாட்டு பள்ளிகள் உள்ளன.அதன்படி, நாமக்கல்லில் உள்ள மாணவ, மாணவியருக்கான விளையாட்டு விடுதியில், 2016-17ம் ஆண்டு சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மாவட்ட விளையாட்டு மற்றம் இளைஞர் நலன் அலுவலரிடம் ஒப்படைத்தவர்களுக்கான தேர்வு, வரும், 9ம் தேதி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.