அரசு விடுமுறை தினங்களில் நூலகங்கள் செயல்படுமா?
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தாலுகா தலைமையிட நூலகங்களை அரசு விடுமுறை தினங்களிலும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூலகர் வாசகர் வட்டகத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மாவட்ட பொது நூலகம் மற்றும் அதன் கீழ் தாலுகா தலைமை பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த நூலகங்கள் அரசு விடுமுறை தினங்கள் மற்றும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் நூலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டு வருகிறது. பொதுவாக அரசு பொது விடுமுறை தினங்களின் போது தான் நூலகத்திற்கு பொதுமக்கள் அதிகளவு படையெடுக்கின்றனர். அன்றையதினம் நூலகம் அடைக்கப்பட்டு விடுவதால் செய்தி நாளேடுகள் மற்றும் நூல்களை வாசிக்க முடியாமல் திரும்பி விடுகின்றனர். குறிப்பாக அரசு பொது விடுமுறையின் போது நூலகங்கள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பொதுவாக தாலுகா தலைமையிட நூலங்களையாவது பணியாளர்களை சிப்ட் முறையில் அமர்த்தி விடுமுறை இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர். பொதுமக்கள் நூலகத்திற்கு வரும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், நூலக பயன்பாட்டை அதிகரிக்க அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது அவசியம் என தெரிவித்தனர்.