உள்ளூர் செய்திகள்

மெட்ரிக் தேர்வில் முதலிடம் பிடித்த ஜெயபாரதி

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வில், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கொங்குவேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயபாரதி, 493 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார். இவர், தமிழ் 98, ஆங்கிலம் 97, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 என 493 மார்க் பெற்றார்.மாணவி ஜெயபாரதி கூறுகையில், "நான் மாநிலத்தில் முதல் மார்க் பெற்றமைக்கு மகிழ்ச்சியாக உள்ளது. டிவி பார்க்காமல், அதிக நேரம் படித்தேன். தொடர்ந்து சிறப்பாக படித்து, மருத்துவக் கல்வியில் சேர வேண்டும். மக்களுக்கு சேவை செய்வது எனது எண்ணம்" என்றார். இவர், தமிழ் 98; ஆங்கிலம் 97; கணிதம் 99; அறிவியல் 100; சமூக அறிவியல் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். ஜெயபாரதி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக, டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தேன். ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களை உடனுக்குடன் படித்து, மனதில் பதிய வைத்துக் கொண்டேன். மாநில அளவில் முதலிடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. டாக்டராக வேண்டும் என்பதே லட்சியம். இவ்வாறு ஜெயபாரதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்