உள்ளூர் செய்திகள்

பி.எட்., பதிவு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு

முதுநிலை பட்டங்களான எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., கல்வி தகுதிகளுடன் பி.எட்., படிப்பை பதிவு செய்யவும், ஏற்கனவே செய்த பதிவுடன், பி.எட்., கல்வித் தகுதியை கூடுதலாக பதிவு செய்யவும் மாணவர்கள் அந்தந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வருகின்றனர். தற்போது வேலை வாய்ப்பு அலுவலகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் கவலைப்படத் தேவை இல்லை. மாணவர்கள் தாங்கள் படித்த கல்லூரியிலேயே (http:/tn.velaivaaippu.gov.in ) இணையதளம்  மூலமாக பதிவு செய்யலாம் என வேலை வாய்ப்பு அலுவலர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்