மருத்துவ துணைப் படிப்பில் காலியிட விவரம்
நர்சிங், பார்மசி உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் கடந்த 29ம் தேதி வரையிலான கலந்தாய்வின் நிறைவில் காலியாக உள்ள மாணவ சேர்க்கை இடங்கள் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. காலியிட விவரங்களைப் பார்க்க http://www.tnhealth.org/notifictaion/VAC_29082011.pdf இணையதளத்தைப் பார்க்கவும். இவ்விடங்களில் மாணவர்களை சேர்க்க இறுதி கட்ட பாராமெடிக்கல் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 5ம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் மாதம் 5ம் தேதி காலை 9 மணிக்கு இறுதிகட்ட பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறுகிறது. 5ம் தேதி முதல் 10ம் தேதி வரையும், 12ம் தேதி முதல் 14ம் தேதி வரையும் நடைபெறுகிறது. இறுதிகட்ட கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தகுதியான மதிப்பெண் உள்ள மாணவர்கள், அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாமல் இருந்தால், கலந்தாய்வு அட்டவணையைப் பார்த்து உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.