இக்னோ எம்.பி.ஏ.-சமூக தொழில்முனைவு சேர்க்கை
இரண்டாண்டு கொண்ட இப்படிப்பில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை 50% (பிற்படுத்தப்பட்ட மாணவராக இருப்பின் 45%) மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முழு நேர வகுப்புகளைக் கொண்ட இப்படிப்பு ஆங்கில வழியில் மட்டுமே கற்பிக்கப்படும். ஓராண்டுக்கு 24,000 ரூபாய் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படும். முதலீடு மற்றும் அமைப்புகளை மேம்படுத்துதல், வெளிநாட்டு முதலீட்டுடன் செயல்படும் நிறுவனங்களின் செயல்பாடு, தொழில்துறை ஆர்வம் மற்றும் அதன் விரிவாக்கம், சொந்த முதலீட்டு நிறுவனத்தை நிர்வகித்தல் போன்ற துறைகளின் கீழ் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும். இக்னோ அலுவலகங்களில் விண்ணப்பங்கள் மற்றும் குறிப்புப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் செப்டம்பர் 16ம் தேதியாகும். மொத்தம் 100 மாணவர்கள் இப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவ சேர்க்கை நடைபெறும்.