சித்த மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு எப்போது?
சித்த மருத்துவ பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேத மருத்துவப் படிப்பு (பி.ஏ.எம்.எஸ்.), ஹோமியோபதி மருத்துவ பட்டப்படிப்பு (பி.எச்.எம்.எஸ்.) இயற்கை-யோகா மருத்துவப் படிப்பு (பி.என்.ஒய்.எஸ்.) ஆகியவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டிலும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சேர இரண்டு மாதங்களுக்கு முன் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்தப் படிப்புகளில் சேர உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 1,400 மாணவர்கள் காத்திருக்கின்றனர். ஆகஸ்ட் 3வது வாரம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, செப்டம்பர் முதல் வாரம் கலந்தாய்வை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது பல சித்த மருத்துவ பட்டப்படிப்பு இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்திய முறை மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்துள்ளதும், சில இடங்களுக்கு இன்னும் அனுமதி பெறாமல் இருப்பதாலும் தரவரிசைப் பட்டியலை வெளியிடவோ, கலந்தாய்வை நடத்தவோ முடியாத நிலையில் சித்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உள்ளது. இதே நிலைதான் முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நிலையும் உள்ளது.