மாற்று மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள் தேவை
கடலூர் : "மாற்று முறை மருத்துவப் படிப்பு மூலம் பொதுமக்களின் நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு உதவியாக சேவை செய்ய வேண்டும்&'&' என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேசினார். தி சுசான்லி மாற்று மருத்துவ சமூக கல்லூரியின் பட்டமளிப்பு விழா கடலூரில் நடந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கலாநிதி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப்பேசுகையில், "மனித குலம் வாழ்வதற்கு ஆரோக்கியம் முக்கியம். அவர்களுக்கு தரமான கல்வியும், சுகாதாரமான வாழ்க்கையும் தேவை. இங்கே நீங்கள் பெற்ற மாற்று முறை மருத்துவப் படிப்பு பொதுமக்களின் நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு உதவியாக சேவை செய்ய வேண்டும்" என்றார். சிறப்பு விருந்தினர் சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணன் பேசுகையில், "உலகளவில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மருத்துவத்துறை முன்னேற்றம் பெற்றுள்ளது. விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று இந்த மாற்று மருத்துவத்திலும் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து தீர்க்க முடியாத நோய்களுக்கும் தீர்வு காண வேண்டும். சமுதாயத்திற்கு பயன்பெறும் விதமாக நீங்கள் பெற்ற கல்வி விளங்க வேண்டும்" என்றார்