உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் தேசிய திறனறி தேர்வு பயிற்சி

புதுச்சேரி : தேசிய திறனறி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். மத்திய அரசு சார்பில் மாநில அளவில் தேசிய திறனறி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு வெற்றி, ஜே.வி.ஆர்.பி. ஏற்பாடு செய்துள்ளன. இதன் துவக்க விழா கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. வெற்றி கல்வி நிறுவன நிறுவனர் பேராசிரியர் குணசேகரன் வரவேற்றார். பயிற்சி பெற உள்ள மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி நுழைவு சீட்டு வழங்கினார். டீன் ராமச்சந்திரன் நாயர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்