மதுரை காமராஜ் பல்கலை தொடர்பு வகுப்புகள்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் பயிலும் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள், பசுமலை மன்னர் திருமலைக் கல்லூரியில் அக்., 15, 16ல் நடக்கிறது. சென்னையில் இளங்கலை முதலாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் அரும்பாக்கத்தில் உள்ள, முகம்மது சதக் மெட்ரிக்., உயர்நிலைப் பள்ளியில் நடக்கிறது. முதுகலை முதலாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்பு கோயம்பேடு செயின்ட் தாமஸ்நகரில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியிலும், பட்டய படிப்பு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள முகம்மது சதக், சைடெக் ஏ.ஜே., கல்லூரியில் அக்., 15, 16ல் நடக்கிறது, என தொலைக் நிலைக் கல்வி இயக்குனர் தனிக்கொடி தெரிவித்துள்ளார்.