உள்ளூர் செய்திகள்

சிறந்த பத்து மேலாண்மை கல்வி நிறுவனங்கள்

இந்தியாவில் உள்ள சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களின் பட்டியலை "இந்துஸ்தான் டைம்ஸ்' வெளியிட்டுள்ளது. இதில் ஆமதாபாத், பெங்களூரு, கோல்கட்டாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. சிறந்த கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்க ஐந்து வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. ஆசிரியர்களின் தரம், மேலாண்மை நிறுவன மதிப்புகள், நிறுவனத்துக்கு வெளியே இருக்கும் மதிப்பு, மாணவர்களின் தரம், சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவை கணக்கிடப்பட்டன. இதன்படி, முதல் பத்து இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்களின் பட்டியலைக் காண்போம். இதில் ஐந்தாவது இடத்தை இரண்டு நிறுவனங்கள் பிடித்தன. சிறந்த பத்து கல்வி நிறுவனங்கள்:1. இந்தியன் இன்ஸ்டிடியூட் மேனேஜ்மென்ட், ஆமதாபாத்2. இந்தியன் இன்ஸ்டிடியூட் மேனேஜ்மென்ட், பெங்களூரு3. இந்தியன் இன்ஸ்டிடியூட் மேனேஜ்மென்ட், கோல்கட்டா4. இந்தியன் இன்ஸ்டிடியூட் மேனேஜ்மென்ட், லக்னோ5. இந்தியன் இன்ஸ்டிடியூட் மேனேஜ்மென்ட், இந்தூர்5. இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ், ஐதராபாத்7. பேக்கல்டி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டில்லி8. எக்ஸ்.எல்.ஆர்.ஐ., ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்டு ஹூயுமன் ரிசோர்சஸ், ஜாம்ஷெட்பூர்9. எஸ்.பி., ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச், மும்பை10. ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், மும்பை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்