யூகோ பாங்கில் ஐ.டி., ஆபிசர் பணிவாய்ப்பு
பொதுத் துறை வங்கியான யூகோ பாங்கில் ஐ.டி., ஆபிசர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். வழக்கமான வயது சலுகைகள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு உண்டு. பி.இ., பி.டெக்., முழு நேர 4 ஆண்டுப் படிப்பில் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், ஐ.டி., போன்றவற்றில் ஒன்றைப் படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., படித்திருப்போரும் விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.பி.எம்.எஸ்., ஜாவா, சி++, கோபல், பாக்ஸ்புரோ, டெவலப்பர் 2000, விசுவல் பேசிக் ஸ்டுடியோ, நெட் போன்றவற்றில் சிறப்புத் திறன் பெற்றிருப்போருக்கு முன்னுரிமை தரப்படும். தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு எழுத்துத் தேர்வானது சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நமக்கு அண்மையிலுள்ள இடங்களில் நடத்தப்படும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணைய தள முகவரி: http://recruitment.ucobank.com/spl_2011_english_24_09_2011_IBPS.pdf