உள்ளூர் செய்திகள்

ஆஸ்திரேலிய பல்கலைகளில் பிஎச்.டி., படிக்க அழைப்பு

ஆஸ்திரேலியாவில் பிஎச்.டி., படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்காக, ஆஸ்திரேலிய  இந்திய இன்ஸ்டிடியூட் அதற்கான பல்கலைகள் மற்றும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் செயல்படும் ஆஸ்திரேலியன் கத்தோலிக்க பல்கலை, டெக்கின் பல்கலை, லா ட்ரோப் பல்கலை, மோனாஸ் பல்கலை, ஆர்எம்ஐடி., பல்கலை, ஸ்வின்பூர்ன் பல்கலை, தி யூனிவர்சிட்டி ஆப் மெல்போர்ன், யூனிவர்சிட்டி ஆப் பேலரட் அன்ட் விக்டோரியா பல்கலைகளில் பிஎச்டி., படிக்கலாம். மூன்று ஆண்டு படிப்பிற்கு கட்டணமாக 44 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும். இத்தொகையில் மூன்று ஆண்டுகள் தங்குவதற்கான விடுதி கட்டணம், போக்குவரத்து மற்றும் இதர செலவுகள், பாடபுத்தகங்கள், கல்விக் கட்டணம் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. பிஎச்.டி.,க்காக எந்த துறை சம்பந்தப்பட்ட படிப்புகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான பிரத்யேக இணையதளத்தில் அனைத்து விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சயின்ஸ், இன்ஜினியரிங், மருத்துவம், தி சோசியல் சயின்ஸ், ஹியூமானிட்டீஸ், பிசினஸ் ஸ்டடீஸ், எஜூகேசன் அண்ட் ஆர்ட்ஸ் போன்ற துறைகளை தேர்வு செய்து கொள்ளலாம். முதுகலையில் பட்டம் பெற்றவர்கள், இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கான விசா விண்ணப்பத்தை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்