உள்ளூர் செய்திகள்

மாலை நேர வகுப்புகளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளில் வழங்கப்படும் பிஸ்கெட்டுகளுக்கு பதில் சிற்றுண்டி வழங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளான சென்னை பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக மாலையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இந்த சிறப்பு வகுப்பு நேரத்தில் மாணவர்களுக்கு பிஸ்கெட்டுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், சிறப்பு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பிஸ்கெட்டுகளுக்கு பதிலாக சிற்றுண்டி வழங்க மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு ஆகும் செலவு, எந்த வகையான சிற்றுண்டி அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்