பள்ளி கல்வி வளர்ச்சிக்கு போதிய நிதியில்லை
மாநிலம் முழுவதிலும் உள்ள, 35 ஆயிரத்து, 795 அரசுப் பள்ளிகளில், அடிப்படை தேவைகள் மலை போல் இருக்கும் போது, "மடு" அளவிற்கு வளர்ச்சி நிதியை ஒதுக்கியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரம் உயராதது ஏன்? கடந்த 2005-06ல், பள்ளிக் கல்வித் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 4,110 கோடி ரூபாய். அடுத்த ஐந்தாண்டுகளில், அதாவது, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 39 ஆயிரத்து, 405 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் (2010-11), 10 ஆயிரத்து, 148 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், 13 ஆயிரத்து, 333 கோடியே, 66 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்படி, பல ஆயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்தபோதும், கல்வித் தரமும், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளும், எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை. பட்ஜெட் நிதியில் பெரும் பகுதி, ஆசிரியர்கள், அதிகாரிகளின் சம்பளத்திற்கே போகிறது. மீதியுள்ள சொற்ப நிதியே, வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதன் காரணமாக, இப்போதும், அடிப்படை வசதியில்லாத அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, கண்ணைக் கட்டுகிறது. ரூ.8 கோடி போதுமா? தமிழக அரசு வெளியிட்ட ஒரு புள்ளி விவரத்தில், "மொத்தம் உள்ள அரசுப் பள்ளிகளில், 31 ஆயிரத்து, 816 பள்ளிகளில், போதுமான வகுப்பறைகள் உள்ளன. 3,979 பள்ளிகளில், 16 ஆயிரத்து, 75 வகுப்பறைகள் தேவைப்படுகின்றன&' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நடப்பாண்டில் 4,444 வகுப்பறைகள் கட்டப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 14 ஆயிரத்து, 16 அரசுப் பள்ளிகளில், ஓரளவுக்குத்தான் தளவாடச் சாமான்கள் உள்ளன என்றும், 6,943 பள்ளிகளில், தளவாடச் சாமான்களே இல்லை என்றும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,248 பள்ளிகளில், கழிவறை வசதிகளே கிடையாது. இப்படி, அடிப்படை வசதிகள் அதிகம் தேவை இருக்கும்போது, நடப்பாண்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியை, மொத்த நிதியில், வெறும் 8 கோடி ரூபாயை (0.6 சதவீதம்) ஒதுக்கியிருப்பது, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நிதியை கூட்ட வேண்டும் "நபார்டு" திட்டம், மத்திய அரசு திட்டத்தின் கீழ், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடப்பதாக, துறை வட்டாரங்கள் கூறினாலும், மாநில அரசு ஒதுக்கும் பட்ஜெட்டில், முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கும், நிதி மிகவும் சொற்பமாக இருக்கிறது. இதை அதிகரிக்க வேண்டும் என்பது, அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.நடப்பாண்டில், 26 இனங்களின் கீழ், 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரம் 1. 5 ஏ.இ.இ.ஓ., அலுவலகங்களுக்கு கட்டடம் கட்டுதல் 11.002. 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், "லேப்&' கருவிகள் 100.003. 100 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நூலகம் 40.004. 50 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் 100.005. 100 உயர்நிலைப் பள்ளிகளுக்கு அறிவியல் சாதனங்கள் 40.006. 100 மேல்நிலைப் பள்ளிகளில், வேளாண்மை தொழிற்கல்விப் பிரிவுக்கு வேளாண் உபகரணங்கள் 50.007. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் மூலம் மொழி ஆய்வகங்கள் 25.008. தேர்வுத் துறையில் ஜெனரேட்டர் இயந்திரம் வாங்குதல் 8.509. தேர்வுத் துறை ஆவணங்களை பாதுகாக்க புதிய கட்டடம் 200.0010. ஆசிரியர் கல்வி இயக்குனரகத்தின் கம்ப்யூட்டர் மயமாக்கலை மேம்படுத்த 3.00 ரூ.8.03 கோடி கடந்த 2010-11ல், அப்போதைய அரசு, புதிய திட்டப் பணிகளுக்காக, 25 இனங்களின் கீழ், 8 கோடியே, 3 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. அறிவியல் சாதனங்கள், "லேப்" உபகரணங்கள் வழங்குதல், கட்டடம் கட்டுதல், வாகனம் வாங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.