உள்ளூர் செய்திகள்

பள்ளிக் கல்வி இணை இயக்குனர்கள் இடமாற்றம்

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் மூன்று இணை இயக்குனர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் தர்ம ராஜேந்திரன், பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இந்தப் பொறுப்பில் இருந்த இளங்கோவன், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுத் துறை இணை இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி (பத்தாம் வகுப்பு), எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். தேர்வுத் துறைக்கு புதிய இணை இயக்குனர் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்