வெளிநாட்டு மாணவர்கள் பட்டியலை வெளியிட வலியுறுத்தல்
தேனி: தனியார் இன்ஜினியரிங், மருத்துவக்கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேனியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.என்.அகர்வால், சிங்வீ அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில், கல்வி வியாபாரமாகி விட்டது என தெரிவித்துள்ளனர். இது தமிழகத்திற்கு முழுமையாக பொருந்தும். உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் எத்தனை பேர் படிக்கின்றனர் என்ற உண்மையான விவரங்களை வெளியிட வேண்டும். தேனி மாவட்டம் 4 முதல்வர்களை தந்துள்ளது. ஆனால் இங்கு ஒரு அரசு கல்லூரி கூட இல்லை. இங்கு அரசு பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்க வேண்டும்“ என்றார்.