கல்வி, சுகாதாரத்தில் மிளிரும் இமாச்சல பிரதேசம்
இமாச்சல பிரதேசம் சிறந்த ஆட்சிக்கான உதாரணமாகத் திகழ்கிறது. சாலை இணைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் இந்தியாவில் முதல் மாநிலமாகத் திகழ்வதாக இது பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் முதலீடு, ஆரம்பக் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் நாட்டிலேயே முதலிடத்திலும் நுகர்பொருள் சந்தை, பொருளாதாரக் கூறுகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை நாட்டிலேயே 2வது இடத்தில் இந்த மாநிலம் இருப்பதாக சமீபத்திய கணிப்புகள் கூறுகின்றன. மலைவாழ் மாநிலமான இ.பி. கேரளாவை விட அதிகமாக அனைவருக்கும் ஆரம்பக் கல்வி, 100% கல்வியறிவு போன்ற குறியீடுகளில் முன்னணியில் இடம் பெறுகிறது. இங்குள்ள மொத்த மாணவர்களில் 20 சதவீதத்தினர் கல்லூரிகளில் சேருகிறார்கள். இது தேசத்தின் சராசரியை விட 2 மடங்கு அதிகமாகும். வளர்ச்சிப் பணிகளைப் பொறுத்தவரை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இந்த மாநிலம் முன் மாதிரியாக இருக்கிறது. இமாச்சல பிரதேச மாநிலம் சாலைகள், கல்வி, சுய வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து வருவதை பிற குறியீடுகளும் காட்டுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாநிலம் சுகாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றில் 3வது இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது இதன் முன்னேற்றம் அனைவராலும் கவனிக்கப்படக் கூடியதாக மாறியுள்ளது.