உள்ளூர் செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் சிண்டிகேட் சிறப்புக் கூட்டம்

சிதம்பரம்: அரசு கடிதத்தின் மீதான சிண்டிகேட் உறுப்பினர்கள் கருத்துக் கேட்பு சிறப்புக் கூட்டம் நேற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிதி நெருக்கடி தொடர்பாக அரசு குழு தணிக்கை செய்தது. இதில் 11வது பிரிவின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதற்கான விளக்கமும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக ஆளவை மன்றம் (செனட்) மற்றும் ஆட்சி மன்றத்தில் (சிண்டிகேட்) கருத்து கேட்டு, அதன் அறிக்கை அனுப்பும்படி உயர்கல்வி துறை முதன்மைச் செயலர் அபூர்வா வர்மா, துணைவேந்தர் ராமநாதனுக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செனட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. நேற்று சிண்டிகேட் உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டம் செனட் ஹாலில் நடந்தது. கூட்டத்திற்கு, சிண்டிகேட் குழுத் தலைவர் துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை இயக்குனர் செந்தமிழ்ச் செல்வி உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அரசு கடிதத்தின் அடிப்படையில் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டத்தில், உறுப்பினர்கள் கருத்துகள் பதிவு செய்து, கூட்ட தீர்மானங்களுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்