திருவண்ணாமலை கல்லூரியில் இலவச கணினி பயிற்சி
திருக்கோவிலூர்: திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் கோடைகால இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இலவசமாக 5 நாள் கம்யூட்டர் அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் முதல் பிரிவு அடுத்த மாதம் 6ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட பயிற்சி 13 ம் தேதி முதல் 17ம் தேதி வரையும், 20 முதல் 24ம் தேதி வரையும், இறுதி கட்டமாக 27ம் தேதி முதல் ஜூன் 31ம் தேதி வரையும் பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு திருக் கோவிலூர், செஞ்சி உள்ளிட்ட நகரின் முக்கிய இடங் களில் விண்ணப்பங்கள் இலவசமாக வினியோகிக்கப் படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உடனடியாக கல்லூரிக்கு வந்து சேர வேண்டும். பதிவு வரிசைப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்லூரி இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பஸ் வசதி மற்றும் மதிய உணவு, சான்றிதழ்கள் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாக இயக்குனர் கம்பன், செயலாளர் செல்வராஜ் ஆகி யோர் தெரிவித்துள்ளனர்.