உள்ளூர் செய்திகள்

பூரண மதுவிலக்கு தேவை: மாணவர்கள் வலியுறுத்தல்

திருநெல்வேலி: பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. மனு விபரம்: மது குடிக்கும் பழக்கத்திற்கு ஏராளமானோர் அடிமையாக உள்ளனர். பல குடும்பங்கள் அழிந்து வருகின்றன. கல்லூரி, பள்ளி மாணவர்களும் குடிப்பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். மதுப்பழக்கத்தால் தன்னிலை மறந்து இளைய சமுதாயம் வன்முறைப்பாதைக்கு திரும்பும் நிலையுள்ளது. தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலன் கருதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பூரண மதுவிலக்கு அவசியம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்