உள்ளூர் செய்திகள்

இலவச ஒட்டுநர் பயிற்சி: இயக்குனர் தகவல்

நாமக்கல்: "இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஆண்களுக்கு இலவச டிரைவிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது" என, பயிற்சி நிலைய இயக்குனர் ராஜூ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஏப்ரல் இரண்டாம் வாரத்தில், ஆண்களுக்கு டிரைவிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி, 15 வேலை நாட்களுக்கு நடைபெறும். பயிற்சியில் வாகனம் ஓட்டுதல், சாலை விதிகள் போன்றவை கற்றுத்தரப்படும்.ஆர்வமுள்ளோர் பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்போர், 18 முதல், 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள தகுதி வாய்ந்தோர் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், திருச்சி மெயின்ரோடு, நாமக்கல் என்ற முகவரியிலோ அல்லது அருகே உள்ள இந்தியன் வங்கியில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் வரும், 6ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான உணவு, இருப்பிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்