போலீஸ் உடற்தகுதி தேர்வு மதுரையில் தள்ளிவைப்பு
சென்னை: தமிழக அளவில் ஆண் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நவ., 7ம் தேதி நடந்தது. மதுரை மாவட்டப் பகுதியில் கலவரம் நீடிப்பதால் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண், பெண் காவலர்கள், 6,000 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. மாநில அளவில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் போலீஸ் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுத்துத் தேர்வு நடந்தது. அதில், 40 ஆயிரம் பேர் தேர்வாகினர். அவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு மாநில அளவில் சென்னை உட்பட 15 மையங்களில் 7ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட பகுதியில் கலவரம் நீடித்து வருவதால், மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட ஆறு மையங்களில் உடற்தகுதி தேர்வு நடைபெறவில்லை. கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டவுடன், உடற்தகுதி தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என போலீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையை தவிர மற்ற ஒன்பது மையங்களில் உடற்தகுதி தேர்வு நடந்தது. அதில், சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், எடை மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்போட்டி நடந்தது. பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு, வரும் நாட்களில் நடைபெறவுள்ளது.