உள்ளூர் செய்திகள்

வட மாநில ரயில்வே தேர்வுகள் ஒத்திவைப்பு!

மும்பையில் கடந்த மாதம் ரயில்வே தேர்வுகளை எழுத வந்த வட இந்திய இளைஞர்கள் மீது நவநிர்மாண் சேனையைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, சகஜநிலை ஏற்படும் வரை ரயில்வே தேர்வுகளை ஒத்திவைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. பாட்னா, முசாரபர்பூர் ரயில்வே தேவாரியம் நவம்பர் 7ம் தேதி தேர்வு நடத்துவதாக இருந்தது. ஜூனியர் இன்ஜினியர்கள், பார்மசிஸ்ட்டுகள், நர்சுகள் ஆகிய பணிகளில் 113 காலி இடங்களுக்கு மொத்தம் 5,586 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், ரூர்க்கேலா, கட்டாக் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ராஞ்சி ரயில்வே தேர்வு வாரியம் 263 உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்ப நவம்பர் 7ம் தேதி தேர்வு நடத்துவதாக இருந்தது. இதற்கு 93,682 பேர் விண்ணப்பித்திருந்தனர். மும்பை தாக்குதலின் எதிரொலியாக இங்கும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என்று கருதி, இத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நிலைமை சீரடையும் வரை தேர்வுகளை நடத்த முடியாது. தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதுக்குமான ஒரே தேர்வு நடத்துவதற்கான சாத்தியத்தை அவர் மறுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்